இலங்கையில் இதுவரை 7.36 மில்லியனுக்கும் அதிகமானCOVID-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
முதல், இரண்டாவது டோசாக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
925,242 பேருக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி முதல் டோஸ்வழங்கப்பட்டுள்ளதாகவும், 385,885 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சினோஃபார்ம் தடுப்பூசி 4, 534, 165 பேருக்கு முதல் டோஸாகவும், 1,286,215 பேருக்கு இரண்டாவது டோஸாகவும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பட்னிக் வி தடுப்பூசி முதல் டோஸாக 159,081 பேருக்கு வழங்கப்பட்டது, 14,464 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.
46,753 பேர் ஃபைசர் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும், 10,088 நபர்கள் இன்றுவரை மொடர்னா தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





