எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதிக்கப்படும் நிலையில் அனைத்து அரச நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்றும் நாளையும் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தியுள்ளனர்..
அனைத்து உறுப்பினர்களும் கொழும்பில் தங்கி இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை தோற்கடிக்க தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
நேற்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
அமைச்சர் கமன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை சுதந்திரக் கட்சி ஏற்கனவே முடிவு செய்துள்ளது.




