நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற மீசாலை இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

Date:

பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை
கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார்.

கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்ட சென்ற போது வழியில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்