வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 596 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
இதில், யாழ் மாவட்டத்தில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்19 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் 9 பேர், யாழ் போதனா வைத்தியாலை 8 பேர், சாவகச்சேரி வைத்தியசாலை ஒருவர், வேலணை வைத்தியசாலை 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் மாவட்டத்தல் பொது வைத்தியசாலையில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் வைத்தியசாலையில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
பரந்தன் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர் தொற்றிற்குள்ளாகினர்.




