15 நாளில் இருவரின் ஆணுறுப்பை அறுக்க தயாராகும் வீரலட்சுமி!

Date:

ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி ( 35). இவர் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர். தலைவர் பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை என தமிழகத்தில் பரபரப்பு நிகழ்வுகளின் மூலம் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்தவர்.

இதற்கு பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் “மை இந்தியா பார்ட்டி” சார்பிலும் போட்டியிட்டவர்.

தேர்தல் சமயத்தில், இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் மர்ம நபர் யாரோ அனுப்பியுள்ளனர். இது குறித்து வீரலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் பதிவு செய்து விசாரிணை மேற்கொண்டு வந்தனர்.. அப்போது சிறிது நாளில் மறுபடியும் வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அந்த வீடியோவில் “எனக்கு இப்படி ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்..

இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்” என மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்

அதில், கையில் அரிவாளை எடுத்து “ஏற்கனவே இதுபோல சம்பவங்களில் புகார் தந்தேன். ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபி நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் “அந்த“ மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்” என்று வார்னிங் தந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி.. ஏற்கனவே நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பை கட் செய்வதாக சொல்லி இருந்தார் வீரலட்சுமி.. இப்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை வைத்து கொண்டு ரெடியாக நிற்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்