முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 2021 ஜூலை 12 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலை வரலாற்றில் முதல் முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தனி எலும்பு முறிவு பிரிவு இல்லை என்றாலும், இந்த பெரும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வள பற்றாக்குறைகள் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் இது முதல் முறையாக ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சந்தருவன் பண்டார ஹெராத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ்போதனா வைத்தியசாலை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் செய்யப்பட்டது.
ஒரு மாவட்ட பொது மருத்துவமனையாக இருப்பதும் மற்றும் முழு முல்லைத்தீவு மாவட்டத்திற்குமான கவனிப்பை வழங்குவதுமான இவ் வைத்தியசாலையில் ஒரு நிலையான எலும்பு முறிவு சிகிச்சையை தொடர்சியாக வழங்க முடியாவிட்டால், இது மருத்துவதுறையின் அவமானம் மற்றும் முல்லைவை மாவட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு நியாயமற்றதுமாகும். ஏனெனில் எமது நாட்டில் இது வரை நிரந்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத ஒரேயொரு மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமாகும்.




