எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்த சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.இரண்டாவது முறையும் ஜனாதிபதி வேட்பாளராக அவரே வருவார் என்பது எனது கணிப்பாகும்.இதில் எதிரணியினரின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அவர்களுக்கே தெளிவில்லை என்று கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை(7) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரையிலான பகுதியில் மெரின் ரைவ்ப் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.இன ஐக்கியத்தை பேணுவதற்கு கல்முனைத்தொகுதி பொத்துவில் தொகுதி தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இத்திட்டத்தை விஸ்தரித்துள்ளோம்.தற்போது இத்திட்டத்தின் 30 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளன.இவ்வேலைத்திட்