15 வயது சிறுமி விற்பனை: ஒவ்வொரு முறையும் சிறுமிக்கு ரூ.15,000 வழங்கிய கடற்படை வைத்தியர்!

Date:

இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமியை பணம் கொடுத்து வாங்கி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட வெலிசறை கடற்படை முகாம் வைத்தியசாலை வைத்தியரை இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருதய சிகிச்சை நிபுணரான லெப்டினன்ட் கொமாண்டர் திமுத்து டி சில்வா என்பவரே இன்று காலை பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறுமியை பணத்திற்காக பெற்றுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலா 15,000 ரூபா வீதம், 30,000 ரூபா செலுத்தியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் லோகன அபேவிக்ரம முன்னிலையில் இன்று அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 124 ன் படி நீதிமன்றத்தின் முன் சந்தேகநபர் வாக்குமூலமளிக்க கோரிக்கை விடுத்தார்.

9ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வாக்குமூலமளிக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்