29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

2 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை: 25 வருடங்களின் பின் தீர்ப்பு!

15 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரிகளை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமிகளின் தாயின் இரண்டாவது கணவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 90 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

பிரதிவாதிக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனியாக இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியென அறிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்து 25 ஆண்டுகளின் பின்னர் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வீதம், ஆறு குற்றச்சாட்டுகளிற்கும் 90 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைகளை ஒரே சமயத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூ .10,000 வீதம், ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் ரூ .60,000 அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதத்தை அவர் செலுத்தவில்லை என்றால், அவர் மேலதிகமாக ஒரு வருடம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு ரூ .1 மில்லியன் ரொக்க இழப்பீடு வழங்கவும், வழங்க தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளி பிணையில் வீட்டில் தங்கியிருந்த பின் வந்தமையால், அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னர், சிறையில் அடைக்க  அனுராதபுர சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளி கல்கிரியகமவை சேர்ந்தவர். அவர் குற்றமிழைத்த போது 36 வயது. தற்போது அவருக்கு 61 வயது.

குற்றம் சாட்டப்பட்டவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சிறுமி இலங்கையில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment