நேற்று (3) நாட்டில் 1,262 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எணணிக்கை 2,64,057 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பதிவான குறைந்த பட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்று பதிவாகியது.


இதுதவிர, நேற்று 34 கொரோனா மரணங்களும் பதிவாகியது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளது.




