ஆண் பெயரில் உருவாக்கிய போலி பேஸ்புக்கினால் விபரீதம்: 3 உயிர்கள் பறிபோன பரிதாபம்!

Date:

இரண்டு யுவதிகள் பொழுதுபோக்காக ஆண் பெயரில் உருவாக்கிய போலி பேஸ்புக் கணக்கினால் 3 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கைவிடப்பட்ட குழந்தையின் மரணம் தொடர்பான மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குற்றம் சாட்டப்பட்ட ரேஷ்மாவின் பேஸ்புக் காதலனை பொலிலீசார் அடையாளம் காட்டினர். தற்கொலை செய்து கொண்ட ரேஷ்மாவின் உறவினர்களான ஆர்யா மற்றும் கிரீஷா அகியோரே ஆனந்து என்ற நபரை போலி ஐடியுடன் ஆள்மாறாட்டம் செய்து தெரிய வந்தது.

அவர்கள் உருவாக்கிய ஆனந்து என்ற போலி கணக்கை உண்மையான நபர் என நம்பிய ரேஷ்மா, குழந்தையை வீசிவிட்டு ஓடிச்சென்றுள்ளார்.

க்ரீஷ்மாவின் நண்பரான ஒருவரை விசாரித்த பொலிசார் இந்த உண்மையை உறுதிப்படுத்தினர். போலி ஐடியுடன் ரேஷ்மாவை ஏமாற்றி வருவதாக க்ரீஷ்மா தனக்கு வெளிப்படுத்தியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

ரேஷ்மாவின் காதலனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையில் இந்த தகவல் முக்கிய பங்காற்றியிருநதது.

டி.என்.ஏ சோதனை முடிவுகள் ரேஷ்மா குழந்தையின் உயிரியல் தாய் என்பதை உறுதிப்படுத்தியது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தனது ஃபேஸ்புக் காதலனுடன் ஓடிப்போவதற்காக தான் பிறந்த குழந்தையை கொன்றதாக ரேஷ்மா பொலிஸாருக்கு அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பேஸ்புக் காதலனை அடையாளம் காண போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

ரேஷ்மா தனது கணவரின் உறவினர் ஆர்யாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதை அடையாளம் கண்டு போலீசார் ஆர்யாவை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் ஆர்யா தனது உறவினர் க்ரீஷ்மாவுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, வழக்கு மேலும் மர்மமாக மாறியது.

இரண்டு பெண்களின் தற்கொலை, வழக்கில் பல சவால்களை ஏற்படுத்தியது. காவல்துறையினர் ஆர்யாவை மட்டுமே வரவழைத்த போதிலும், அவர் க்ரீஷ்மாவுடன் தற்கொலை செய்து கொண்டார்.

அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து, ஆர்யா மற்றும் ரேஷ்மாவின் கணவர்களை போலீசார் விசாரித்து அவர்களின் விரிவான அறிக்கைகளை பதிவு செய்தனர்.

ஆர்யாவும் க்ரீஷ்மாவும் பொழுது போக்காக ஆனந்த் என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கியதை போலீசார் கண்டுபிடித்தனர். ரேஷ்மாவின் கர்ப்பம் மற்றும் குழந்தையை கைவிடுவதற்கான அவரது முடிவைப் பற்றி இருவரும் அறிந்திருக்கவில்லை என்றும் கருதப்படுகிறது.

கைது செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, பேஸ்புக் பக்கமொன்று பிறந்த குழந்தை உட்பட மூன்று பேரின் மரணத்திற்கு காரணமாகி விட்டது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்