பிரிட்டனில் அண்டைவீட்டுக்காரர்களிற்கு இடையில் நடந்த சண்டையில்,பாதியாக வெட்டப்பட்ட மரம் ஒன்று, சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது.
ஷெஃபீல்ட் (Sheffield) நகரில் இந்த சம்பவம் நடந்தது.
மரம் ஒன்று இரண்டு வீடுகளுக்கும் நடுவில் அமைந்திருந்தது.
அதில் கூடிய பறவைகள், தமது பக்கம் உள்ள பாதையை அசுத்தப்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அண்டை வீட்டுக்காரர் முறைப்பாடு சொல்லியுள்ளார்.
கோடைக்காலத்தில் அப்படித்தான் பறவைகள் கூடும் என்று இந்த வீட்டுக்காரர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். இரு வீட்டுக்காரர்களிற்குமிடையில் சச்சரவு ஆரம்பித்துள்ளது.
ஒருவர் பறவைப் பிரியர். மற்றொருவர் சுத்தம் பார்ப்பவர். இதனால் மோதலிற்கு முடிவு கிடைக்கவில்லை.
மரத்தின் சில கிளைகளை வெட்டுவது குறித்தும், பறவைகள் அதில் கூடாமல் இருக்க வலைகளைப் பொருத்துவது குறித்தும் சமரசம் பேசப்பட்டது.
இருப்பினும், அசுத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத அண்டை வீட்டுக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. மரத்தைப் பாதியாக வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்.
திடீரென, மரத்தின் ஒரு பாதி காணாமல் போயிருந்தது. அண்டை வீட்டுக்காரர் இரவோடு இரவாக மரத்தின் பாதியை வெட்டி விட்டாார். பாதி மரம் மட்டும் இப்பொழுது நிற்கிறது.
மரத்தின் படம் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் பகிரப்பட்டதை அடுத்து, மரம் பிரபலமாகியுள்ளது.




