இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

Date:

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மருத்துவ நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவரான டாக்டர் சமல் சஞ்சீவ, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பாரிய டெங்கு பரவலின்போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தடுப்பூசியை நாட்டுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் இதுவரை முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு டெங்கு தடுப்பூசியின் விலை சுமார் 50,000 ரூபாய் எனக் குறிப்பிட்ட அவர், தேவையான இரண்டு தடுப்பூசிகளையும் தனியார் துறையினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு 100,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைத் தடுப்பதற்காகப் பல நாடுகளில் இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறுவர்களுக்கும் இது வழங்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தேவையான அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகத் தனியார் துறையினூடான தடுப்பூசி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, அடுத்த டெங்கு பரவல் ஏற்படுவதற்கு முன்னர் தடுப்பூசியை அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஊடாகப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், அனுமதி வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தி, தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்