மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள் அதன் ஆதாரத்தை அழித்தும் அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றில் ஓப்படைத்து பொய்யான தகவலை கொடுத்து நீதிமன்றத்தை தவறான முறையில் வழிநடத்தி வருகின்றதுடன் இந்த சுருக்குவலை உரிமையாளர்களிடம் மாதாந்தம் பல இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கப்பம் பெற்று கடல் வளத்தை அழித்து வருகின்றனர் என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை(14) அமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி பாலமுனை, மற்றும் பூநொச்சிமுனை கடலில் சட்டவிரோதமான சுருக்வலை பாவித்து மீன்பிடிக்கும் சுருக்குவலைகள் கடலில் இருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்லடி கடற்படை முகாம் கடற்படையினர் சுமார் 50 இலச்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான 5 சுருக்கு வலைகளை கைப்பற்றினா.;
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுருக்கு வலையை 2ம் திகதி மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சுருக்கு வலைகளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு அதனை சட்டவிரோத சுருக்கு வலை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக பழைய சிறிய சுருக்கு வலைகளை அவர்களிடம் வாங்கி கொண்டு அதனை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இந்த திணைக்களத்தில் கடமையாற்றும் ஒரு சில உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக இவ்வாறு சட்டவிரோமாக சுருக்குவலையை கடற்படையின் கைப்பற்றி வழங்கப்படும்போது அந்த சுருக்கு வலைக்கான ஆதாரமான வலையில் உள்ள கம்பியிலான வளையம் அந்த வளையத்தின் ஊடாக செல்லும் கயிறு என்பவற்றை அகற்றி சுருக்குவலை ஆதாரத்தை அழித்து சுருக்குவலை இல்லை என நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கி சுருக்குவலை உரிமையாளர்களை காப்பாற்றி மீண்டும் அவர்களின் கரங்களுக்கு சட்டவிரோத சுருக்குவலையை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளது.
2024 ம் அண்டு சட்டவிரோத சுருக்குவலை வைக்கப்பட்டிருந்த சிறிய கொட்டகையை கடற்படையினருடன் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் முற்றுகையிட்டு கதவை உடைத்து கைப்பற்றி அதனை நீதிமன்றில் ஒப்படைக்காது கிண்ணியாவைச் சேர்ந்த சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு பல இலச்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது
இவ்வாறு கடந்த முதலாம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலையை உரியவர்களிடம் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவும் இன்னொருவரிடம் 2 இலட்சம் ரூபாவும் இன்னொருவரிடம் 2 இலட்சம் ரூபாவுமாக 3 பேரிடம் 8 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த சட்டவிரோத சுருக்குவலை உரிமையாளர்களிடம் கையளித்து விட்டு அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தை தவறான முறையில் வழி நடத்தியுள்ளனர்
அத்துடன் கடற்றொழில் நீரியல்வள சில அதிகாரிகள் இந்த சட்டவிரோத சுருக்குலை பாவித்து மீன்பிடிப்பவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டு ஒரு கிழமைக்கு ஒரு படகுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் மாதம் ஒன்றிற்கு பூநொச்சிமுனை, நொச்சி முனையில் இருக்கும் 8 சட்டவிரோத சுருக்கு வலைக்கும் 2 இலட்சம் ரூபாவை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் இலஞ்சமாக பெற்று வருகின்றனா.;
இவ்வாறு தமிழில் உள்ள பழமொழியான வேலியே பயிரை மேயந்த கதையாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் உள்ளது. பயிர் என்பது மீனவர்கள் வேலி என்பது கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் ஆனால் இன்று வேலியே பயிரை மேய்ந்த கதையாக மட்டக்களப்பு கடல் வளங்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அழித்து வருகின்றது
இந்த திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு கடலில் அல்லது மீன் வளத்தில் அக்கறையில்லை அவர்கள் 3 வருடம் அல்லது நான்கு வருடங்கள் ஒரு மாவட்டத்தில் வேலை செய்வார்கள் பின்னர் இடமாற்றம் வந்ததும் வேறு மாவட்டத்துக்கு அல்லது வேறு திணைக்களத்துக்கு செல்வார்கள் அதனால் அவர்கள் இருக்கும் காலத்தில் இவ்வாறு சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிப்பவர்களுடன் உடந்தையாக இருந்து பல இலட்சம் ரூபாவை கப்பமாக பெறுகின்றனர்.
இது நீண்ட காலமாக இந்த திணைக்களத்தில் நடைபெற்று வருககின்ற விடையம் இருந்த போதும் இதனை எமது அமைப்புக்கு எழுத்து மூலமாக ஆவணங்கள் இருப்பதால் உரிய அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம் எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் திணைக்கள பணிப்பாளர் ஒரு விசேட குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.




