குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது

Date:

குழந்தை ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், குற்றச் செயல்களில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய இருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) நேற்று முன்தினம் (14) கைது செய்தனர். கொல்லப்படவிருந்த குழந்தை, முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் பிள்ளையாவார்.

கைது செய்யப்பட்டவர்கள், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ‘பழனி கனிஸ்டர்’ (Palani Canister) எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரனின் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, ​​சந்தேக நபர்களிடமிருந்து ஒரு ஷொட்கன் (shotgun) ரக துப்பாக்கி, 12-போர் (12-bore) ரக தோட்டாக்கள் ஐந்து, ‘ஐஸ்’ (crystal methamphetamine) போதைப்பொருள் 22.34 கிராம், ஒரு கைபேசி மற்றும் பயணப்பை ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலதிக விசாரணைகளின் போது, ​​’பழனி கனிஸ்டர்’ குழுவினர் கடந்த 2025 நவம்பர் மாதம் ‘அசேல’ என்பவரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டனர்.

‘பழனி கனிஸ்டர்’ குழுவில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்ததாலேயே கொல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவரின் இரு பிள்ளைகளில் ஒருவரைச் சுட்டுக் கொல்லும் பணி, இந்த துப்பாக்கிதாரிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் வழங்கப்பட்டிருந்தமை விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்