காலியில் ஊசி போட வந்தவர்களின் விபரங்களை கோரும் நீதிமன்றம்!

Date:

காலியில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது டோஸை பெற்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களின் பட்டியலை வழங்குமாறு தெற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 வது டோஸைப் பெறுவதற்காக, மேல் மாகாணத்திலிருந்து 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜூன் 07 ஆம் திகதி காலி மாவட்டத்திற்கு பயணித்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன.

காலியின் உனவதுனவில் உள்ள மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி வழங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கொழும்பைச் சேர்ந்தவர்கள், காலிக்குச் சென்றிருந்தனர்.

இந்த தடுப்பூசி திட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு ஒரு விசாரணையைத் தொடங்கியது.

அதன்பிறகு, காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் பிராந்திய தொற்றுநோயியல் தலைவரும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியமை மற்றும் காலி மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களுக்கு தடுப்பூசி போட்ட குற்றச்சாட்டின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்