மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் 2 யானைகள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவின் கதிரவெளி வயல் பிரதேசத்திலும், ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கரடியனாறு கித்துள் பிரதேசத்திலும் இவ் யானைகளின சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடற் கூற்றாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் அவற்றினை அடக்கம் செய்துள்ளனர்.

அவை இறந்தமைக்கான காரணத்தினை கண்டறிவதற்காக அவற்றின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்