ஜீவாவின் தந்தை மீது மோசடி புகார் அளித்துள்ள விஷால்!

Date:

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், சொல்லாமலே, புன்னகை தேசம், திருப்பாச்சி, ஜிலால், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களைத் தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக ஆர்பி சௌத்ரி தயாரித்துள்ளார். மேலும் அவர் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தையுமாவார்.

இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்