சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் 75 கோடியா!

Date:

திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 75கோடி சம்பளம் கொடுக்க பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரணமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தற்போது அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறார். அவர் அறிமுகமான மெரீனா படம் சுமாராக ஓடினாலும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்றது.

அதன்பிறகு எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை மிகப்பெரிய ஹீரோவாக மாற்றியது. தற்போது ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமான ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேநேரம் அவர் நடித்து வெளிவர காத்திருக்கிற ‘டாக்டர்’ படம் கொரானாவால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புதிய வாய்ப்பை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அளித்துள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக 5 திரைப்படங்களில் நடித்து தரவேண்டும். அந்த படங்களை கண்டிப்பாக இரண்டு வருடங்களில் நடித்து கொடுக்கவேண்டும். அந்த படங்களில் நடிக்க மொத்தமாக 75 கோடி சம்பளம் கொடுக்கப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு சிவகார்த்திகேயன் ஒத்துக்கொண்டால் திரையரங்கு, ஓடிடி, சேட்டிலைட் என எல்லா தளங்களிலும் சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்ற வகையில் பெரிய லாபம் கிடைக்கும். சன் பிக்சர்ஸ் இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் பயன்படுத்தி கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்