சிறிதர் தியேட்டரில் சிஐடி பல மணி நேரம் சல்லடை!

Date:

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று(19.10.2026) ஈடுபட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சல்லடைபோட்டு தேடப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதலின் நிறைவில்,
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர் கைது

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம   நோக்கிச் சென்ற பேருந்து...

உக்ரைனை கடுமையாக சாடிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், xக்டோபர் 18 அன்று தனது சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்