மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன்

Date:

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய ஊறணி பகுதியைச் சோந்த 56 வயதுடைய திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14 ம் திகதி பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர் இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்து திருடன் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.

இதையடுத்து பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான 15468 இகலகம, 64832 ரகுமான், 35574 சாமர, 73553 விக்கினதாஸ், 100404 திஸநாயக்கா ஆகியோர் கொண்டு குழுவினர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிரி கமராவில் பதிவாகிய வீடியோ காட்சியை கொண்டு விசாரணையினை மேற்கொண்டனர்.

இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட மோதிரம் ஒன்று, பென்னரள் ஒன்று, தோடு ஒன்றை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த தங்க ஆபரணங்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்