வடமாகாணத்தில் நேற்று 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 118 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாண பல்கலைகழகம், யாழ் போதனா வைத்தியசாலைகளின் ஆயவுகூடங்களில் 956 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டதில், 162 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதில், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், அக்கராயன்குளம் வைத்திசாலையில் 2 பேர் என 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவர் என 21 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், அளவெட்டி வைத்தியசாலையில் 11 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 68 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் என, பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில், மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
முல்லைத்தீவு விமானப்படை சிப்பாய் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந்த முடிவுகள், வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தெரிய வந்தது. அண்டிஜன் சோதனை முடிவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.