சர்ச்சைக்குரிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி நிலத்தின் கட்டுமான திட்டம் இடைநிறுத்தம்!

Date:

கொழும்பு ள டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக அபிவிருத்தி செய்யவதாக அரசு கூறிய திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் அடுக்கு மாடி கார் தரிப்பிடம் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படவிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலஇன்று விளக்கமளித்துள்ளார்.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பழைய பையனான கம்மன்பில, இந்தத் திட்டம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடன் இந்த விஷயத்தை பற்றி கேட்டதாகவும் கூறினார்.

பாடசாலை இந்தத் திட்டத்தில் திருப்தி அடைந்துள்ளது என்ற புரிதலின் பேரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் அதிருப்தி அடைந்தால் அது இடைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பாடசாலை மற்றும் பழைய மாணவர்களால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி இன்று அறிவுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் காவலில் இருந்த...

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்