சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ற்ரொம் ஈ ஜேசி மாம்பழங்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அங்கயன் விவசாயிகளிற்கு உறுதி வழங்கியுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ற்ரொம் ஈ ஜேசி மாம்பழங்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்து தருமாறு விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று முழங்காவில் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அங்கயன் இராமநாதன் கள நிலைமகளை ஆராய்ந்ததுடன், விவசாயிகளின் பாதிப்பக்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
ற்ரொம் ஈ ஜேசி மாம்பழங்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், விவசாயிகளிற்கு இவ்வாறான ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தில் இடம் பிடிக்கக்கூடிய வர்த்தக பழங்களை சந்தைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்படாத வகையிலு்ம, விவசாயிகள் பாதிக்காத வகையிலும் சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாகவும் அங்கயன் இராமநாதன் விவசாயிகளிற்கு உறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




