சினிமா பத்திரிகையாளர்களுக்கு சத்தமில்லாமல் உதவியுள்ள விஜய் சேதுபதி!

Date:

நடிகர் விஜய் சேதுபதி சினிமா பத்திரிகையாளர்களுக்கு பண உதவி அளித்து உதவியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் திரைத்துறையும் ஒன்று. சினிமா தொழிலாளர்களைப் போல சினிமா பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சினிமா பத்திரிகையாளர்கள் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி ஆரம்பத்திலிருந்தே பத்திரிகையாளர்களுடன் நல்ல நட்பைப் பாராட்டி வருகிறார். தற்போது செய்துள்ள உதவியையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பணம் பெற்றுக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ள பிறகே இது மற்றவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அதையடுத்து விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்