முல்லைத்தீவு மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!

Date:

மக்கள் கவனமாக இருக்கவேண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். பாரிய பரவலாக கொரோனா தொற்று வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொரோனா நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அராசங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றியவர்கள் கொரோனதொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு கடமையாற்றிய 926 பேருக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார வைத்தியஅதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்களை வினையமாக வேண்டிக்கொள்கின்றோம். ஆடைத் தொழில்சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பங்கள் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்றார்கள். மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டு மேலும் பி.சி.ஆர் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இனம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வருவதை நிறுத்தவேண்டும். இது ஒரு பாரிய பரவலாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்