நாட்டில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-
பொரலஸ்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூச்சிழுப்பு நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெதகீம்பிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், மே 14 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், மே 15 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கொன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், மே 15 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 14 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய், இதயநோய் மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்;களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயாகலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், மே 13 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்;களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய ஆண் ஒருவர், நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பெண் ஒருவர், ஹிக்கடுவ கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரம்புக்கணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், கேகாலை போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொல்கொல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், மே 15 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுவன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுக்கை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய ஆண் ஒருவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹப்புகஸ்தலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், மே 10 ஆம் திகதி நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடபிட்டிவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய ஆண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் வலிப்பு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுவலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 12 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.