நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.
எனினும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நேரத்தில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கும். மகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும் நீடிக்கும். இந்த நடைமுறைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..
நாளை முதல் தேசிய அடையயாள அட்டையை அடிப்படையாகக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு.
தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கமானது ஒற்றை எண் (1,3,5,7,9) என்றால், ஒற்றை இலக்க திகதியில் வீட்டை விட்டு வெளியேற முடியும்.
தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கமானது இரட்டை எண்ணாக (0,2,4,6,8) இருந்தால், இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம்.
உதாரணமாக, நாளை (17) ஒற்றை எண் இலக்க திகதி என்பதால், தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கம் ஒற்றை எண்ணைக் கொண்டவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனினும், உத்தியோகபூர்வ பணிகளில் ஈடுபடுபவர்களிற்கு இந்த நடைமுறை பொருந்தாது.




