மட்டு அம்பாறையில் 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பல கோடி சொத்தை வீணடித்த மீன்பிடி திணைக்கள இரு அதிகாரிகளுக்கு எதிராக- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்க தவறிய வீணடித்த அந்த இரு திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்ற பிரிவு, மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஈ.பி.டி.பி.கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார். தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று திங்கட்கிழமை (24) பாலமீன்மடு காரியாலயத்தில் இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மீனவர்களின் வளர்ச்சிக்கா   (IFAD)   சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் அமைப்பின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 9 மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ்  மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் வழங்கப்பட்டது

இந்த நிலையில் கிழக்கு  மாகாணத்தில் 7 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் செயலிழந்துள்ளது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, காத்தான்குடி, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 4 எரிபொருள் நிலையங்களும்  செயலிழந்துள்ளது டன் அதில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் கட்டிட கதவுகள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளது

இவ்வாறு செயலிழந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக அப்போது இருந்து தற்போது கல்முனை பிராந்திய மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள பணிப்பாளராக இருந்த அவர் இது தொடர்பாக திணைக்கள மேலதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருந்ததுடன் அங்கு திருடப்பட்டது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல் தனது கடமையை சரியாக செய்யாது பல கோடி ரூபா பெறுமதியான அரச சொத்தை பராமரிக்க தவறியுள்ளார்.

அவ்வாறே அப்போது கல்முனை பிராந்திய பணிப்பாளராக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள பணிப்;பாளர் இருந்து  வரும் அவர் காலமுனை, நிந்தவூர் மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களும் செயலிழந்து அங்கும் திருட்டு போயுள்ளது தொடர்பாக மேலதிகாரிகளுக்கு அறிவிக்காமல் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்யாமல் தனது கடமையை சரியாக செய்யாது பல கோடி ரூபா பெறுமதியான அரச சொத்தை பராமரிக்க தவறியுள்ளனர்.

இவ்வாறு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்காமல் தவறு செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் என்னுடன் கொண்ட கால் புணர்ச்சி காரணமாக அவருடன் சேர்ந்து மட்டு மீன்பிடி பணிப்பாளர் களுவங்கேணி, பாலைமீன் மடுவில் இயங்கிவரும்  இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயலிழக்க வைத்து மீனவர்களுக்கு வரும் வருமானத்தை இல்லாது ஒழிக்க செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீனவர் சங்கங்களிடம் குத்தகை அடிப்படையில் எடுத்து மாதம் ஒன்றுக்கு  30 ஆயிரம் ரூபா மீனவர் சங்கத்துக்கு வழங்கி வருவதுடன் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்தால் அவர்களுக்கு எனது சொந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றேன்

இந்த நிலையில் இரா.சாணக்கியன் களுவங்கேணி யில் இயங்கிவந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மண்ணெண்ணை வழங்குவதை அவரது அதிகாரத்தை வைத்து நிறுத்தியுள்ளார். அதேவேளை மீன்பிடி திணைக்கள அமைச்சின் பணிப்பாளர் துண்டிக்கப்பட்ட மண்ணெண்ணை விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மீன்பிடி பணிப்பாளருக்கு அறிவித்தும் இதுவரை அவர் நடவடிக்கை எடுக்காது 8 மாதங்களாக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மீன்பிடி திணைக்கள பணிப்பாளர்கள் பல கோடி ரூபா பெறுமதியான அரச சொத்தை வீணடித்து பாதுகாக்க தவறியது தொடர்பாக இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி  மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு குற்ற நிதி பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்