தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு–

Date:

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன். தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .

எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக அறிவித்தது அதன் ஆரம்ப நாள்  முதலாம் திகதியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சென்று ஆரம்பித்து வைத்தனர்

இதனை தொடர்ந்து மாவீரர் மாதத்தை முன்னிட்டு மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் உள்ள கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி  மாவீரர் மாதம் ஆரம்பித்து வைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்