யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்து, தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த வாரம் பிரசவம் இடம்பெற்றது. நேற்று முன்தினம் தாயும், சேய்களும் வீடு சென்றனர்.
கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் மகப்பேற்று சத்திர சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவன் மேற்கொண்டார்.
பிரசவத்தின் பின்னர் தாய் தொற்றிலிருந்து குணமடைந்தார். குழந்தைகளிற்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.
தாயாரும் குணமடைந்ததை தொடர்நது நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
2
+1
+1
+1