உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

Date:

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் அஞ்சல் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட கருத்தரங்கும், வீதி ஊர்வலம் (03) திருகோணமலை மாநகரில் நடைபெற்றது.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் திருகோணமலை பிரதேச அத்தியட்சகர் எஸ்.ஜெகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கொழும்பு தபால் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் ஜே.எம்.நாளீர், திருகோணமலை தபால் நிலைய தபால் அதிபர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட பிராந்திய அஞ்சல் அதிகாரிகள், அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை தபால் நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த விசேட கருத்தரங்கில், அஞ்சல் துறை எவ்வாறு காலத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும், பொதுமக்கள் பெறக்கூடிய நன்மைகள் குறித்து கொழும்பு தபால் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் ஜே.எம்.நாளீரினால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பாரம்பரிய கடிதப் போக்குவரத்தைத் தாண்டி, மின்னஞ்சல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகள் விரிவாக்கப்பட்டமை, சேமிப்பு கணக்குகள் மற்றும் அஞ்சலக வங்கிச் சேவைகள் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்திற்கு அஞ்சல் துறை ஆற்றும் பங்களிப்புக்கள், ஒன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் சூழலில், பார்சல் விநியோகச் சேவைகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் வழங்கும் புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பக் காலத்தில் அஞ்சல் துறையின் பங்களிப்பு, புதிய டிஜிட்டல் அஞ்சல் சேவைகள், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் விரைவு அஞ்சல் சேவைகள் (EMS) குறித்தும் தெளிவுட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு வீதி ஊர்வலம் காலை 9.20 மணியளவில் திருகோணமலை தலைமை அஞ்சலக வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, வீதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று அஞ்சல் திணைக்களத்தின் சேவைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்து அது தொடர்பான விளக்கங்களையும் வழங்கி வைத்தனர். இந்த வீதி ஊர்வலம் பிரதான பஸ் தரிப்பிடம் வரைச்சென்று மீண்டும் அஞ்சலகத்தை வந்தடைந்தது.
இதில் 120 இக்கு மேற்பட்ட திருகோணமலை மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்