மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை  இல்லாது ஒழித்து தருமாறு கோரி திராய்மடுவில் நேற்று சனிக்கிழமை (03 மாலை  ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு  ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டையடுத்து நேற்று மாலை 5.00 மணிக்கு  திராய்மடு வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர் இதையடுத்து இந்த சட்டவிரோத மதுபான விற்பனையால் சிறுவர்களின் கல்வி பாதிப்பு இந்த வியாபாரத்தை முற்றாக பொலிசார் ஒழிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத வியாபாரிகளுடன் சில பொலிசாருக்கு தொடர்பு உள்ளது  எனவே இதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தால் கிராமமே அழியும் எனவே சர்வதேச மது ஒழிப்பு தினமான இன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து கிராமத்தை பாதுகாத்து தரவும்.

சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் கைகளை பிடித்து இழுத்து ஒரு இலட்சம் தருவதாக அட்காசம் புரிந்து வருகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக கொக்குவில் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்தும் பொலிசார்  கசிப்பு வியாபாரி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பொலிசாரிடம் இருந்து இந்த கிராமத்தை ஜனாதிபதி பாதுகாத்து தருமாறு கோஷங்கள் எழுப்பி சுலோகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் மாலை 6.00 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்