முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக நிகழ்வும் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட்  மண்டபத்தில் இன்று(3) நடைபெற்றது.

குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,   முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர்  , முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபை  தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரஃப், சட்டத்தரணி ஷிபான் மஃரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மைஸர் காசிம்,  மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான   அன்சார் மௌலானா உட்படப் பல சட்டத்தரணிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் நன்றியுரையைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சட்டத்தரணிகளுக்கான விசேட கலந்தரையாடலொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நாட்டின் தற்போதைய சட்ட மற்றும் சமூக-அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்