எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

Date:

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ் வழக்கு தொடர்பில் ஆரம்பத்தில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அனோஜனின் தாயார், “எனது மகன் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் எனது தங்க மகனை மன்னித்து, உயிருடன் மீட்டுத் தாருங்கள்” எனக் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை

இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-பாருக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்