14 வயது மாணவியை காதலித்த 17 வயது மாணவன் அடித்துக் கொலை: காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்!

Date:

காதல் விவகாரத்தில் 17 வயது பாடசாலை மாணவனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 4 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதரங்கட்டுவ, அட்டரங்கனவில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவனே கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர்கள், உதைத்து விழுத்தி விட்டு, கடுமையாக தாக்கியுள்ளனர்.

சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவியொருவரை காதலித்துள்ளார். இதனை மாணவியின் உறவினர்கள் எதிர்த்தனர். இதனால் இரு தரப்பிற்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்பட்டு வந்தன.

இது தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிசில் பல முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தன.

இந்த நிலையிலேயே மாணவன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்