3 நாளென்றால் சும்மாவா?: மன்னாரில் மதுவெறியர்கள் கொலைவெறி!

Date:

மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) மாலை சுகாதார நடை முறைகளை கடைபிடிக்காது பலர் மது பானப் பொருட்களை கொள்வனவு செய்ய முன்டியடித்துள்ள போதும் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை இரவு முதல் எதிர் வரும் மூன்று தினங்கள் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று வியாழக்கிழமை மாலை மன்னாரில் உள்ள மது பானசாலைகளுக்கு முன் அதிகளவிலான மது பிரியர்கள் கூடியிருந்தனர்.

மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதி முழுவதும் மோட்டார் சைக்கில் உட்பட தமது வாகனங்களை நிறுத்தி விட்டு சுகாதார நடை முறைகளை கருத்தில் கொள்ளாது மது பிரியர்கள் மது பானம் கொள்வனவு செய்ய முண்டியடித்தனர்.

மதுபானசாலைகளுக்கு முன் பிரதான வீதியில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மது பானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

மது பிரியர்கள் எதிர் வரும் 3 தினங்களுக்கு தேவையான மது பான பொருட்களை கொள்வனவு செய்துச் சென்றுள்ளனர்.

சுகாதார நடை முறைகளை மீறி அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும்,மாலை 6 மணிக்கு பின்பே குறித்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிய வருகின்றது.

இதனால் குறித்த பகுதியில் நீண்ட நேரம் சுகாதார நடை முறைகள் பின் பற்றப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்