பெண்களுக்காக யாழ் பல்கலையின் முன் விழிப்புணர்வு நடவடிக்கையில் வெளிநாட்டவர்

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து பேசியதுடன் நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைந்து எண்ணற்ற நுண் பிளாஸ்டிக் (Microplastics) துகள்களாக மாறி கடல் மற்றும் நீர்நிலைகளில் கலப்பதாகக் குறிப்பிட்டார்.

அவை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் உடலுக்குள் செல்வதோடு, உணவு, குடிநீர், உப்பு மற்றும் பிற வழிகள் மூலம் மனிதர்களின் உடலிலும் நுழைவதாக அவர் விளக்கினார்.

மேலும், நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரம் மற்றும் அதன் நீண்டகால விளைவுகள் குறித்து கல்வி நிறுவனங்களில் போதிய அளவில் கற்பிக்கப்படுவதில்லை என்றும், இதனால் மக்கள் தாமாகவே விழிப்புணர்வுடன் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் ஏந்தியிருந்த பதாகையில், “Always bring your own box, bag & bottle – Refuse Plastic” (எப்போதும் உங்களுடைய சொந்தப் பெட்டி, பை மற்றும் பாட்டிலைக் கொண்டு வாருங்கள் – பிளாஸ்டிக்கைத் தவிருங்கள்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

அவர் மேலும் தெரிவிக்கையில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு இயற்கையான உணவுகளை உண்ணுங்கள் மாமிசத்தை தவிருங்கள் எனக் கூறியதுடன் உலகில் 18 மில்லியன் பேர் பட்டினியால் வாழ்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மேலும் ஆண்களால் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாவதாகவும் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை
பெண்களுக்கு வழங்குங்கள் எனவும் கூறினார்

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்