கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா பாதிப்பு ; படிப்படியாக அதிகரிக்கும் உயிரிழப்பு!

Date:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரையும் நோய்த்தொற்று பாதித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த 32 வயதான மருத்துவர் சண்முகப் பிரியாவிற்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் கடந்த ஞாயிறு அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் மூன்றில் இரண்டு கர்ப்பிணிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நோயின் தாக்கம் தீவிரமடைவதுடன் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐசியூவில் ஒரு கர்ப்பிணி கூட அனுமதிக்கப்படாத சூழலில், நடப்பாண்டில் கர்ப்பிணிகள் பலரும் ஆக்சிஜன் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதைக் காண முடிகிறது.

இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனாதடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சி அளித்து வருகின்றன. எனவே கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் சூழல் இருக்கிறது. தற்போதைய கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் வருகை தராமல் 3வது, 5வது, 7வது, 9வது மாதத்தில் மட்டும் பரிசோதனைக்கு வந்தால் போதும் என்று சில மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது

குழந்தை ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், குற்றச் செயல்களில் தொடர்புடைய...

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்