கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

Date:

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது என்றும் ஸ்டாலினிடம் கேட்டேன். கொளத்தூரில் எஸ்ஐஆர் மூலம் ஸ்டாலின் குறிவைக்கப்பட்டார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் ஆளும் தவெகவை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றிபெறுவது கடினம் என எனக்கு ஒரு பெண்மணி போனில் தெரிவித்தார். நான் அதை முதலில் அலட்சியம் செய்தேன். பின்னர், ‘உங்களுக்கு எதிராக சதி நடக்கிறது’ என்று ஸ்டாலினிடம் சொன்னேன். பின்னர், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்று ஸ்டாலினிடமும், சேகர்பாபுவிடமும் சொன்னேன்.

நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது? என்று ஸ்டாலினிடம் கேட்டேன். ஆனால், ‘அனைத்தையும் சரியாக வெரிபிக்கேஷன் செய்துவிட்டோம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என்றனர். தேர்தலுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நம் கவனத்துக்கு வந்தது என்பதை சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் அங்கு இறந்தவர்கள் 20 ஆயிரம் பேர். மிஞ்சியவர்கள் எப்படியோ நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு கட்சிக்கு எதிரான நடவடிக்கையா, இல்லை?

இது ஒரு தேசத்துக்கு எதிரான சதி அல்லவா? எஸ்ஐஆர், இவிஎம்-ஐ பயன்படுத்தி தேர்தல் வெற்றிகளை திருடும் போக்கு எவ்வளவு ஆபத்தானது. தமிழகத்தில் , கேரளாவில் பாஜகாவால் வெல்ல முடியாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தன்னியல்பாக தோற்கடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என முன்பே சொன்னேன். இவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எஸ்ஐஆரை பயன்படுத்தி பாஜகவின் கொள்கை எதிரிகள் குறிவைத்து வீழ்த்தப்பட்டனர்” என்று திருமாவளவன் பேசினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்