சந்தி சிரிக்கும் விஜய் அமைச்சர்களின் கூத்துக்கள்!

Date:

‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை கூடத் தெரியாத அமைச்சர்கள் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’ என அதிமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய்யின் நண்பர் என்ற ஒரே தகுதியை முன்னிறுத்தியே இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரசியல் புரிதலற்ற அவர், அண்மையில் கச்சதீவு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, அருகிலிருந்தவர் “நோ கொமண்ட்ஸ்“ என கூற, அதையே இவரும் கூறிவிட்டு நழுவிச்சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்