வடமாகாணத்தில் 82 பேர்… யாழில் 69 பேர்: எகிறும் தொற்று எண்ணிக்கை!

Date:

வடமாகாணத்தில் இன்று 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 67 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வடமாகாணத்தில் இன்று 977 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் 67 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேரக்கப்பட்ட ஒருவர், புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள் 5 பேர், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர், தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 29 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை 7 பேர் உள்ளிட்ட 67 பேர் யாழில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 12 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 9 பேர் (நெல்லியடி சந்தை தொகுதி மற்றும் வெதுப்பகத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), சாவகச்சேரி வைத்தியசாலையில் 3 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலை 3 பேர், கோப்பாய், அச்சுவேலி வைத்தியசாலைகளில் தலா ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்