டிக்கோயா இரட்டைக் கொலையாளி கைது

Date:

டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி வயதான தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்புப் பகுதியில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தவிர, பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு, அண்மையில் கடையை மூடிவிட்டு அங்கேயே வசித்து வந்த 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர்.

இவர்களது பிள்ளைகள் கொழும்புப் பகுதியில் வசித்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினரை கொலை செய்த பின், அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியில் நடமாடியதுடன், நகைக்கடைகளுக்குச் சென்று வந்தமையும், கொலை நடந்த கடையை நோக்கிச் செல்லும் காட்சியும் சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தன.

சந்தேகநபர் தங்கியிருந்த இடத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்