எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்துவிட்டு சட்டசபைக்கு வந்த அமைச்சர் கீர்த்தனா!

Date:

தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சராக பதவியேற்ற கீர்த்தனா என்ற பெண்மணி, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். கருப்பையாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய எம்எல்ஏக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்