ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

Date:

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 10ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த ஆணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ருவான்வெல்ல நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்