நாவற்குழி விகாரையின் பிக்குவொருவர், சிறுமியுடன் அத்துமீறி நடக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் 17 வயதான சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரையில் உள்ள 70 வயதான பிக்கு சிறுமியின் கையை பிடித்து இழுத்து, அத்துமீறி நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த பிக்குவை கைது செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.




