புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக்குள்ளும் புகுந்தது கொரோனா!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து முகாமைத்துவம் செய்கின்ற அதிகாரிகள் சுமார் 30 பேர் வரையில் பணியாற்றி வருகின்றனர்

இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தாலும் தனிமைப்படுத்தல் செயற்ப்பாடின்றி நேரடியாக கடமையாற்றிவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறையினர் இவர்களில் 10 பேருக்கு எழுமாறாக பி சிஆர் பரிசோதனைகள் செய்த வேளையிலேயே அவர்களிடமிருந்து 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலே குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாதாரண பணியாற்றினார் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனூடாக புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் முகாமைத்துவ ஊழியர்கள் மாத்திரமன்றி பணியாளர்களுக்கும் கொரோனா பரவியுள்ள ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

எனவே இந்த ஆடை தொழிற்சாலையில் தொடர்புடையவர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணுவதோடு கொரோனா தொற்று அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக சுகாதாரப் பிரிவினர் நாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைவிட முள்ளியவளை கணுக்கேணி. பகுதியில் ஒருவருக்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்