தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின்
கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்த குளங்களும் வான் பாய்கின்றன. அத்தோடு
கிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள குடமுருட்டி குளம் மாத்திரம் இன்று
(28) மாலை வரையான தகவலின் படி வான் பாய்கின்றன. இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கல்மடு, கனகாம்பிகைக்குளங்களும் வான் பாய்கின்றன. இதன் காரணமாக தாழ்
நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மக்கள் தொடர்ந்தும் இடமபெயர்ந்து
வருகின்றனர்.




