உண்மை விரைவில் வெளிவரும்-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

Date:

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகி இருப்பது, தமிழகத்தையே வேதனையிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 72மணி நேரத்தின் பின்னர் வீடியோ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்னும் தான் மன வேதனையில் இருந்து மீளவில்லை என்றும். கரூரில் நடந்தது சதி என்ற தொனிப்படவும் பேசியுள்ளார்.

அதில் குறித்த விடயத்தில் மக்கள் உண்மை நிலை அறிவார்கள் என்றும் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் மக்கள் உண்மையை வெளியில் சொல்லும் போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

தானும் ஒரு சராசரி மனிதன் தான் என்றும் சம்பவத்தை தொடர்ந்து தாம் விட்டு செல்ல மனமில்லாத போதும் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்கவே அவ்விடத்தில் இருந்து சென்றதாகவும், இதற்கு பின்னால் என்ன நடந்தது என்ற உண்மை விரைவில் வெளியே வரும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்