சாவகச்சேரியில் வீதியை புனரமைக்க உத்தரவிடக்கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Date:

60 வருடங்களாக புனரமைக்காமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளான சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருடை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குறித்த வீதியில் வசித்துவரும் வி.வாகீசனால் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மீசாலை தட்டாங்குளம் வீதி 350க்கும் மேற்பட்ட மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவர்களும், ஏராளமான பொதுமக்களும் பிரயாணம் செய்யப் பயன்படுத்தும் பிரதான வீதியாக காணப்படுகின்றது.

இந்த வீதி கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான புனரமைப்பும் செய்யப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் சகல அரச திணைக்களுக்குக்கும் தெரியப்படுத்தியும், புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்த போதும் எந்தவிதமான முன்னெற்றகரமாண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் குறித்த விதியினை புனரமைப்பதற்காக மனுராரருக்கு முன்னாள் பிதேச சபை செயலளர் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தினால் 18 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதம் மூலம் அறியத்தந்தும் இன்றுவரை எந்தவிதமான புனரமைப்புப் பணிகளும் நடைபெற்றிருக்கவில்லை. இவ்வாறு குறித்த வீதி புனரமைப்பிற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு நடவடிக்கைகளும் முன்னொடுக்கப்படாததை அடுத்து மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி பிரவின் பிரேமதிலகவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளான தனுக்க ராகுமத்த மற்றும் றிசித் அபேசூரிய ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

இவ்வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மாதம் 4,5 ஆம் திகதிகளில் நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்